நீங்க 100 வயசு வரை வாழணுமா? அப்போ இத எப்போதும் மறக்காதீங்க!
பொதுவாக மனித வாழ்க்கையில் உணவு இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
நம்முடைய நாளாந்த டயட்டில் சில குறிப்பிட்ட வைட்டமின்களை எடுத்து கொள்வதன் மூலம் நீண்ட ஆயுளோடு வாழ முடியும்.
இந்த வைட்டமின்களை மருந்து வில்லைகள் மூலம் எடுத்துக் கொள்வதை விட உணவு வாயிலாக எடுத்து கொண்டால் உடல் நலனும் மேம்படும்.
அந்த வகையில் நீண்ட ஆயுளோடு இருப்பதற்கான வைட்டமின்களை எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. வைட்டமின் டி
வைட்டமின் டியை நாம் காலையில் கிடைக்கும் சூரிய ஒளியில் பெற்றுக் கொள்ளலாம். இதனால் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். அத்துடன் உடலில் உள்ள எலும்புகளும் மேம்படும். மேலும் மனநிலை கோளாறுகளிடமிருந்தும் தப்பிக் கொள்ளலாம்.
வைட்டமின் டி உடலில் போதியளவு இல்லாத போது ஆட்டோ இம்முயூன் கோளாறுகள், புற்றுநோய் மற்றும் இதய நோய் வரும் ஆபத்து அதிகமாகும். இவற்றை தடுக்க வேண்டும் என்றால் உடலில் சூரிய வெளிச்சம் படும்படி காலையில் அமர்ந்திருத்தல், கொழுப்பு நிறைந்த மீன்கள் மற்றும் வலுவூட்டப்பட்ட தானியங்கள் உணவாக எடுத்துக் கொள்ளல் போன்ற வேலைகளை செய்யலாம்.
2. வைட்டமின் சி
ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் நிறைந்த உணவுகளில் வைட்டமின் சி தாரளமாக கிடைக்கும். இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படும். ஃப்ரீ ரேடிக்கல்ஸிடமிருந்து செல்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் வேலையை இது செய்கிறது.
திடீரென உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டு விட்டால் உடலில் கொலஜன் உற்பத்தியாக்கி காயங்களை ஆற்றும். அத்துடன் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை உறிஞ்சவும் உதவியாக இருக்கிறது.
அத்துடன் புற்றுநோய்கள், இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. தினமும் உங்கள் உணவுடன் ப்ரோகோலி, குடை மிளகாய், கிவி பழம், சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள் உள்ளிட்ட உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.
3. வைட்டமின் இ
ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் நிறைந்த வைட்டமின் இ செல்களை ஆபத்துக்களிலிருந்து காத்துக் கொள்கிறது. நாள்பட்ட நோய்களின் தாக்கத்தை குறைத்து என்றும் இளமையாக இருப்பது வைட்டமின் இ உதவிச் செய்கிறது.
அத்துடன் நம்முடைய சருமத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதோடு வயது சார்ந்த அறிவாற்றல் குறைபாடுகளையும் சரிச் செய்கிறது. இந்த வைட்டமின் இயை நட்ஸ், விதைகள், கீரைகள், காய்கறி எண்ணெய் மற்றும் வலுவூட்டப்பட்ட தானியங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |