தமிழரின் பாரம்பரிய உணவுக்கு வந்த பரிதாபநிலை… ஷாக் கொடுத்த குல்ஃபி இட்லி! அழிவு அருகில் உள்ளது?
நமது தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்றாகவும், வழக்கமாக நாம் சாப்பிடும் இட்லிக்கு கர்நாடக தலைநகரான பெங்களுருவில் புதிய வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
உணவு துறையில் பல புதுமைகள் செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒரு சில புதுமைகள் மக்களை ஈர்க்கும் வகையிலும், ஒரு சில மக்களை தவறாமலும் போவதுண்டு.
ஒன்றுக்கொண்டு தொடர்பே இல்லாத 2 உணவு முறைகளை இணைத்து, புதுமையான உணவை தயாரிப்பது இப்போது உணவு உலகில் ட்ரெண்டாக உள்ளது.
Innovative food technology of how the Idli got attached to the Ice cream stick.
— Mahendrakumar (@BrotherToGod) September 30, 2021
Bengaluru and it's food innovations are always synonymous!@vishalk82 pic.twitter.com/IpWXXu84XV
இந்நிலையில் இட்லி மற்றும் சாம்பார், சட்னியின் சுவையான காம்போ பேக் தற்போது வினோதமான உணவாக மாற்றப்பட்டு உள்ளது.
சட்னி மற்றும் சாம்பர் உள்ளிட்ட சைட் டிஷ்ஷில் இட்லியை நனைத்து சாப்பிடும் வகையில், பெங்களூரில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட்டில் ஐஸ்கிரீம் ஸ்டிக் இட்லி பரிமாறப்படுகிறது.
இணையத்தில் வைரலாகி வரும் ஐஸ்கிரீம் ஸ்டிக் இட்லியை கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஸ்டிக்கில் வெள்ளை நிற இட்லி இருந்தால் பரவாயில்லை! அது ஐஸ்கிரீம் என்றால் கடவுள் தான் இந்த உலகத்தை காப்பாற்ற வேண்டும், அழிவு அருகில் உள்ளது!! என்று பாரம்பரிய உணவு விரும்பிகள் கூறி வருகின்றனர்.
சிலர் இந்த புதுமையை விரும்பும் அதே நேரத்தில் சிலர் இதை வெறுத்தும் வருகின்றனர். தமிழரின் பாரம் பரிய இட்லிக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா?