வழவழப்பு தன்மை கொஞ்சமும் இல்லாமல் வெண்டைக்காய் பெரியல்: எப்படி செய்வது?
வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் ஆகியன நிறைந்து காணப்படுகின்றது.
இது கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது. வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
இத்தனை சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காயை அதன் வளவளப்பு தன்மை காரணமாக பலரும் சாப்பிடுவதற்கு விரும்புவதில்லை.
கொஞ்சமும் வழவழப்பு தன்மை இல்லாமல் வெண்டைக்காய் பொரியல் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
துருவிய தேங்காய் - 3 தே.கரண்டி
பூண்டு - 2 பல்
மிளகாய் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க தேவையானவை
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/4 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை- சிறிதளவு
செய்முறை
முதவில் வெண்டைக்காயை தண்ணீர் அலசி நன்றாக சுத்தம் செய்து பின்னர் சுத்தமான துணியால் துடைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் சிறிய துண்டுகளாக நறுக்கி தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை போட்டு பொரிய விட வேண்டும்.
பின்னர் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்க வேண்டும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து லேசாக கிளறிவிட வேண்டும். வெண்டைக்காய் ஓரளவிற்கு வெந்ததும் அதில் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பச்சை வாசனை போனதன் பின்னர் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலந்து வதக்கி இறக்கினால் சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |