அச்சு அசல் அப்பாஸை போலவே மாறிய மகன்... இணையத்தில் குவியும் லைக்குகள்
நடிகர் அப்பாஸ் அவரின் மனைவி, மகள், மகனுடன் எடுத்த புகைப்படமொன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகர் அப்பாஸ்
காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவரின் முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் படமாக மாறியது.
இவரின் அழகிற்கே தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
இவருக்கு சுத்தமாக தமிழே தெரியாது ஆனாலும் படைப்பா, ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், மின்னலே, கண்டு கொண்டேன் கண்டுகோண்டேன் போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதன் பிறகு சினிமாவில் படவாய்ப்புகள் குறைய பிஸ்னஸில் அதிக கவனம் செலுத்தி வந்தார். பின்னர் முன்னணி ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து வந்த எரும் அலி என்றப் பெண்ணை திருமணம் செய்து குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டிலானார்.
இந்த தம்பதிகளுக்கு மகன் ஏமான் மற்றும் மகள் எமிரா என்று இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் அப்பாஸ் தற்போது நியூஸிலாந்தில் பெட்ரோல் பங்க் , பாத்ரூம் கிளீனர் போன்ற வேலைகளைப் பார்த்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
தற்போது சமூக வலைதளத்தில் நடிகர் அப்பாஸ் மனைவி, மகள், மகனுடன் எடுத்த புகைப்படம் ஒன்று ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
அந்தப் புகைப்படத்தில் அப்பாஸின் மகன் ஏமான் இளம் வயதில் அப்பாஸ் எப்படி இருந்தாரோ அப்படியே அவரும் இருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |