கொளுத்தும் வெயில் உடல் சூட்டை தணிக்கனுமா? ஏலக்காயை இப்படி சர்பத் போட்டு குடிச்சு பாருங்க!
கொளுத்தும் வெயில் உடல் சூட்டையும் கிளப்பி விடும்.
இதனால் உடல் உபாதைகளையும் சந்திக்க நேரிடும். அன்றாட வேலைகளை செய்வதிலும் சிரமம் உண்டாகும்.
எனவேதான் வெயில் காலத்தில் நம்மை எப்போது நீரேற்றத்துடனும், உடலை குளுர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும்.
சனி பெயர்ச்சி 2022 - ஏழரை வாய் விட்டு கதற வைப்பார்? தப்பிக்க ஒரே ஒரு பரிகாரம் இருக்கு...!
அந்த வகையில் ஏலக்காய் பொடி பயன்படுத்தி செய்யக் கூடிய சர்பத் பானம் வெயிலை சமாளிக்க சிறந்ததாக இருக்கும்.
ஏலக்காய் சர்பத் எப்படி போடுவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஏலக்காய் தூள் - 1
- எலுமிச்சை சாறு - 2 தேகரண்டி
- சர்பத் - 2 தேகரண்டி
- உப்பு - 1/2 தேகரண்டி
- எலுமிச்சை தோல் துண்டு - 2
- சர்க்கரை - தே.அ
- ஐஸ் கட்டிகள் - 5 7 தேவைக்கு ஏற்ப
- தண்ணீர் - 4 கப்
செய்முறை
ஒரு கிண்ணத்துல் 4 கப் தண்ணீர் சேர்த்து அதில் எலுமிச்சை சாறு, சர்க்கரை , உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளுங்கள்.
பின் ஏலக்காய் பொடி , சர்பத் சேர்த்து கலந்துவிடுங்கள்.
ஆபத்தான கேன்சரையே குணப்படுத்தும் சக்திவாய்ந்த கறுப்பு உணவு பொருள்...எப்படி சாப்பிட வேண்டும்?
இப்போது பரிமாறவிருக்கும் கிளாஸில் 2 துண்டு எலுமிச்சை சேர்த்து அதில் சில ஐஸ் கட்டிகளையும் சேர்த்து கலந்து வைத்துள்ள பானத்தை ஊற்றுங்கள்.
தேவைபட்டால் அதன் மேல் புதினா இலைகளை நறுக்கி தூவலாம்.
அவ்வளவுதான் உங்கள் தாகத்தை தணிக்கும் பானம் ரெடி.