ஓட்டல் சுவையில் சூப்பரான ஸ்பைசி நண்டு மசாலா செய்வது எப்படி?
நண்டில் நியாசின் அதிகமாக உள்ளது. இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவை குறைக்கும்.
எனவே வாரத்தில் இரண்டு முறையாவது உணவில் கட்டாயம் நண்டு சேர்த்து கொள்ள வேண்டும்.
ஓட்டல் சுவையில் இன்று காரசாரமான நண்டு மசாலா செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்
- நண்டு - 1 கிலோ
- எண்ணெய் - 1 குழி கரண்டி
- இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்
- கரம் மசாலா - அரை ஸ்பூன்
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- காய்ங்த மிளகாய் - 4
- மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்
- மிளகு - 2 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- மல்லி - 2 ஸ்பூன்
- சோம்பு - அரை ஸ்பூன்
- தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
- முந்திரி பருப்பு - 4
- உப்பு - தேவைக்கு
- கறிவேப்பிலை - மல்லி - சிறிதளவு

செய்முறை
முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவிக்கொள்ள வேண்டும்.
பின்னர் நண்டு மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மஞ்சள் பொடி சேர்த்து கொதி வந்ததும் தண்ணீரை வடிகட்டிவிடவும்.
பின்பு வெங்காயம், தக்காளி, மல்லி இலை நறுக்கி கொள்ளவும் . அதன் பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போடவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
அதே நேரத்தில் மிளகு, மல்லி, சீரகம், சோம்பு லேசாக வறுத்து மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். கடாயில் வெங்காயம், தக்காளி கிரேவி மசிந்து வந்தவுடன் நண்டை சேர்க்கவும்.
மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பின்பு அத்துடன் அரைத்தமசாலா, தேங்காய் கலவை சேர்த்து 15 நிமிடம் வைத்து மசாலா வாசனை போனவுடன் எண்ணெய் மேலே மிதந்து வரும்போது இறக்கவும்.
ஸ்பைசி நண்டு மசாலா ரெடி.
