அடுப்பே தேவையில்லை.... சூப்பரான மொறு மொறு உருட்டு பொரிகடலை செய்வது எப்படி?
சமைக்காத சாலட் போன்ற ஆரோக்கியம் அளிக்கும் உணவு வகையான எண்ணெய் பொரிகடலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
எண்ணெய் பொரிகடலை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- மொறு மொறு உருட்டு பொரிகடலை – 3 குழிக் கரண்டி அளவு
- சின்ன வெங்காயம் – 12 எண்ணம்
- சீரகம் – 2 ஸ்பூன் அளவு
- உப்பு – தேவையான அளவு
- நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன் அளவு

செய்முறை
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த வெங்காயத்தை சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
வாயகன்ற பாத்திரத்தில் உருட்டு பொரிகடலையை எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் சீரகத்தை கைகளில் வைத்து கசக்கி சேர்க்கவும்.
பின்னர் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம், தேவையான உப்பு, நல்ல எண்ணெய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

கலவையை நன்கு ஒரு சேரக் கிளறவும். பத்து நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். பத்து நிமிடங்கள் கழித்து உண்ணவும். சுவையான எண்ணெய் பொரிகடலை தயார்.
இதனை சிறுவர்களுக்கு பள்ளி விட்டு வந்ததும் மாலை சிற்றுண்டியாகவும் செய்து கொடுக்கலாம்.
இதில் உள்ள சின்ன வெங்காயம் மற்றும் பொரிகடலை சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும்.
எனவே மழைகாலத்தில் இதனை சிறுவர்களுக்கு அடிக்கடி செய்து கொடுத்து இயற்கை முறையில் நோய் தடுப்பாற்றலைப் பெறுங்கள்.