தைத் திருநாளில் நாவூற வைக்கும் கற்கண்டு பொங்கல் செய்வது எப்படி?
Thai Pongal
Healthy Food Recipes
By Rinosharai
தமிழர் பண்டிகையாம் தைத்திருநாளுக்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஆரோக்கியமான முறையில் கற்கண்டு பொங்கல் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி -1 கப்
- பால் - 2 கப்
- தண்ணீர்- 1 கப்
- அரைத்த கற்கண்டு - 4 கப்
- முந்திரி- 3
- நெய்- 2 மேசைக்கரண்டி
- ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
- பேரீச்சம்பழம் - 3
செய்முறை
முதலில் ஒரு பானையில் பால் ஊற்றி, தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்ததும் அரிசியை சேர்த்து குழைந்து வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசி வெந்ததும் அதில் அரைத்த கற்கண்டு சேர்த்து நன்கு கிளரிக் கொள்ளவும். பின் 3 நிமிடங்கள் வேக விட்டு இறக்கிக் கொள்ளவும்.
இறுதியில் நெய்யில் முந்திரி, பேரீச்சம்பழம் மற்றும் ஏலக்காய் பொடி போன்றவற்றை வறுத்து, பொங்கலில் சேர்த்து இறக்கினால் சுவையான கற்கண்டு பொங்கல் ரெடி.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US