சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக இந்த பொங்கலை சாப்பிடுங்க! நாவூறும் ருசியில் செய்வது எப்படி?
தமிழர் திருநாள் தைப் பொங்கலை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இன்றைய தினத்தில் ஆரோக்கியம் நிறைந்த தினை அரிசியில் பொங்கல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தினை அரிசி - 100 கிராம்
பாசிப்பருப்பு - 20 கிராம்
பனை வெல்லம் - 200 கிராம்
நெய்- 100 கிராம்
முந்திரி - 10
திராட்சை - 10
ஏலக்காய் – 5
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பைத் தனித்தனியே வறுத்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் ஊறவைத்துள்ள திணை அரிசி மற்றும் பாசிபருப்பை கழுவி தேவையான அளவு தண்ணீர் வைத்து வகை வைக்கவும்.
திணை அரிசியும், பருப்பும் பொங்கல் பதத்திற்கு வந்ததும் அதில் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து கிளறவும்.
அத்துடன் சிறிதளவு உப்பு சேர்க்கவும். வெல்லம் கரைந்து பொங்கலுடன் கலந்து பதத்திற்கு வந்ததும் அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
பிறகு, நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து, பொங்கலில் சேர்த்து சிறிதளவு நெய் மேலே ஊற்றி இறக்கினால் சுவையான திணை சர்க்கரை பொங்கல் ரெடி.