நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு ரசம்! செய்வது எப்படி?
சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.
இதில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.
இதனை வைத்து ரசம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளி கரைசல் – 1 மேசைக்கரண்டி
தக்காளி – 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை – 10-12
கருப்பு மிளகு – 1-2 தேக்கரண்டி
பூண்டு – 4-5 பற்கள்
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உலர் சிவப்பு மிளகாய் – 2
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
செய்முறை
முதலில் 2 சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் 4-5 கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து மிக்சியில் அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு தக்காளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும், இதனுடன் பெருங்காய தூளையும் சேர்த்து கொள்ளலாம்.
இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, புளி கரைசல் சேர்க்கவுடன், பின்னர் இதனுடன் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
தீயை குறைத்து வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும், மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, 1 சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காய தூள் சேர்த்து விதைகள் வெடிக்கத் தொடங்கும் போது மசாலாவை சேர்க்கவும்.
அவ்வளவு தான், கொத்தமல்லி இலைகளை தூவி விட்டால் சுவையான பூண்டு ரசம் தயார்!!!