சர்க்கரை நோயாளிகள் இந்த உணவை பயப்படாமல் சாப்பிடலாம்! ஆரோக்கியம் அதிகமாம்
சம்பா ரவை என்றழைக்கப்படும் கோதுமை ரவை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு, இதை அவர்கள் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது மட்டுமன்றி உடலை ஆரோக்கியமாகவும் வைக்கும்.
இதனை கொண்டு உப்புமா செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சம்பா ரவை – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
வரமிளகாய் – 2
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் சம்பா ரவையை கடாயில் போட்டு வாசம் வரும் வரை சிறிது நேரம் வறுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கிய பின்னர், தக்காளி, வரமிளகாய் சேர்க்கவும், நன்றாக வதங்கிய பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து 1 1/2 கப் தண்ணீரை ஊற்றவும்.
தண்ணீர் கொதிக்கும் போது, சம்பா ரவையை சேர்த்து மூடிவைக்கவும், தண்ணீர் வற்றியதும், அடிபிடிக்காமல் கிளறி இறக்கினால் சத்தமான உப்புமா தயார்!!!