ரவை ஒரு கப் இருந்தா போதும்!! இப்படி செஞ்சு அசத்துங்க
அவசரமாக சமைக்க வேண்டுமென்றால், சட்டென நினைவுக்கு வருவது உப்புமா, அந்தளவுக்கு ரவை இன்றியமையாத ஒன்று.
ஆனால் உப்புமா என்றாலே அலறியடித்து ஓடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களுக்கான சூப்பரான ரெசிபி தான் ”ரவா பொங்கல்”.
தேவையான பொருட்கள்
ரவை - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
பால் - ஒரு கப்
மஞ்சள் தூள் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை
பெருங் காயத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்
முந்திரி - 8
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - கால் கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
பாசிப் பருப்புடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும். எண்ணெய் மற்றும் சிறிது நெய் சேர்த்து காய வைத்து, அதில் மிளகு, சீரகத்தைச் சேர்க்கவும்.
பொரிந்ததும் இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் ரவையை சேர்க்கவும்.
ரவை நன்றாக வறுபட்டதும் பால், 3 டம்ளர் கொதிக்கும் தண்ணீர், வெந்த பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, நெய் சேர்த்துக் கிளறவும்.
தீயைக் குறைத்து மூடி வைத்து, 10 நிமிடம் கழித்து இறக்கினால் ரவா பொங்கல் தயார்.