தேங்காய் சட்னியா சாப்பிட்டு போரடித்து விட்டதா? 10 நிமிஷத்தில் இந்த சட்னி செஞ்சு சாப்பிடுங்க
ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கும் மக்களுக்கு, சாப்பாட்டின் மீது அதீதி பிரியம் வந்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.
30 கிலோ எடையுடன் இருந்தவர்கள் எல்லாம், தற்போது 40 கிலோவுக்கு வந்துவிட்டனர், அந்த அளவுக்கு சாப்பிடுவது, தூங்குவது, சமூகவலைத்தளங்கள் பார்ப்பது இப்படி தான் பொழுதை கழித்து வருகிறோம்.
தினமும் புதுசு புதுசாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்கு இருக்கிறது.
அந்தவகையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என சாப்பிட்டு வந்தவர்களுக்கு, முள்ளங்கியில் சட்னி செய்யலாம் என்று தெரியுமா?
எப்படி செய்வது என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முள்ளங்கி- 2 கப்
வெங்காயம் - 2
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 4
பூண்டு பல் - 2 பல்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
வெங்காயம், முள்ளங்கியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, தனியா, பூண்டு, வரமிளகாய் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் நறுக்கிய முள்ளங்கி சேர்த்து ஒரு 10 நிமிடம் மூடி வேக வைக்கவும்.
நன்கு வெந்தவுடன் வதக்கிய பொருள்களை நன்றாக ஆற வைத்து பின்பு மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவை கொண்டு தாளித்து சட்னியில் ஊற்றினால் சுவையான முள்ளங்கி சட்னி தயார்..