காலையில் இந்த சாலட்டை சாப்பிட்டாலே போதும்! ஏராளமான நன்மைகளை உண்டாம்
காலை உணவை அரசனை போல உண்ண வேண்டும் என கூறுவார்கள். இதில் அதிகமான ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இருப்பினும் நாம் அவசரமாக வெளியே செல்லவேண்டி இருப்பதால் பலரும் காலை உணவை தவிர்க்கும் சூழல் உள்ளது.
ஆனால் இது பல நோய்களுக்கு வழிவகுக்கிறது, எனவே தவறாமல் காலை உணவை உண்டபின்னர், வாழைப்பழம் சாப்பிடுவது சிறந்தது.
இதில் அதிகப்படியான நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
இதனை வைத்து சுவையான சாலட் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம்- 2
புளிக்காத தயிர் - 5 மேசைக்கரண்டி
தேன் - 3 மேசைக்கரண்டி
தேங்காய்ப் பூ - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாழைப்பழத்தை தோலை நீக்கி விட்டு வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பழம, தேன், தயிர், தேங்காய் பூ, ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கலக்கவும். கடைசியாக கொத்தமல்லி தழை போட்டு பரிமாறவும்.