மிக டேஸ்டியான அவல் உப்புமா: 10 நிமிஷத்துல சத்தான உணவு
நெல்லை ஊறவைத்து, இடித்து, அதிலிருந்து உமியை நீக்கி அவலாகப் பயன்படுத்துகிறோம்.
இதுவே கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அவலில் ஊட்டச்சத்துகள் ஏராளம், சமைப்பதற்கு மிக எளிதாகவும் அதே சமயம் உடனடியாக எனர்ஜி கொடுக்கும் உணவாகவும் விளங்குகிறது.
இதை வைத்து அவல் வெஜ் உப்புமா செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையானவை
அவல் - 2 கப்
கேரட், உருளைக்கிழங்கு - தலா 1
பச்சைபட்டாணி - ஒரு கைப்பிடி
பச்சைமிளகாய் - 4
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 5 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை - அரை கப்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பச்சைமிளகாயை நறுக்கி, காய்களுடன் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பருப்பு வகைகளை தாளித்து, காய்கறிகள், பட்டாணி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும்.
காய்கள் வதங்கியதும் ஊறிய அவலை சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி இறக்கினால் சுவையான அவல் உப்புமா தயார்!!!