5 நிமிடத்தில் சுவையான சீஸ் பிரெட் சாண்ட்விச் செய்ய வேண்டுமா?
பலரும் பசிக்கு பிரெட்டை உணவாக எடுத்துக்கொள்வார்கள். பிரெட்டை கொண்டு பல வகையான டிஷ்களை செய்யலாம்.
அந்த வகையில் எப்போதும் அவசரத் தேவைக்கு சீஸ் மற்றும் பிரெட் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இப்படி பசியின் தேவைக்கோ, ருசியின் தேவைக்கோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் - 2
முட்டை - 1
வெங்காயம் - 2 டிஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
மிளகுப் பொடி - கொஞ்சம் சுவைக்காக
உப்பு - தே.அ
சீஸ் - 2 டிஸ்பூன்
வெண்ணெய் - 1 டிஸ்பூன்
செய்முறை விளக்கம்
முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக்கொள்ளுங்கள். அதன் பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள், உப்பு சேர்த்து கலக்கிக்கொள்ளுங்கள்.
பின் சீஸ் துருவி அதையும் கலந்துகொள்ளுங்கள். இதை தற்போது முட்டை ஆம்லெட்டாக தவாவில் ஊற்றி பெப்பர் தூவி வாட்டி எடுக்கவும்.
அடுத்ததாக, பிரெட்டை வெண்ணெய் தடவி இரு புறமும் வாட்டி எடுத்து அதன் நடுவே ஆம்லெட்டை இரண்டாக பிரித்து ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும்.
பின்னர் மீண்டும், தவாவில் வைத்து பிரட்டை அழுத்தியவாறு இரு புறமும் வெண்ணெய் ஊற்றி வாட்டி எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் தயார்.