மசாலாக்கள் கெட்டு போகாமல் இருக்கணுமா? அட்டகாசமான களஞ்சிய குறிப்புகள் இதோ
பொதுவாக தமிழர்களின் சமையலில் மசாலா பொருட்கள் இன்றி அமையாது ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
இதனை பயன்படுத்துவதால் உணவிற்கு இயற்கையாகவே மணம், நிறம், சுவை கிடைக்கின்றன. அத்துடன் இவற்றை தாண்டி ஆரோக்கியமான நன்மைகளையும் மசாலாக்கள் கொடுக்கின்றன.
எனினும், எந்தப் பொருளுக்கு காலாவதி நேரம் உண்டு. அதுவரையில் நாம் மசாலா பொருட்களை பாதுகாத்து வைப்பது அவசியம்.
களஞ்சியப்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அதன் மணம், சுவை மாறுபட வாய்ப்பு உண்டு. மொத்தமாக வாங்கி சேமித்து வைப்பதால் தேவை, நேரம், பணம் இவைகளை மிகுதியாக்கலாம்.
அந்த வகையில் மசாலாப் பொருட்களை எப்படி நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
களஞ்சிய குறிப்புகள்
1. மசாலா பொருளை பயன்படுத்திய பின்னர் அதன் பாட்டில் மூடிகளை உடனடியாக மூடி விட வேண்டும்.
2. மசாலா பொருட்களை சூரிய ஒளியில் படும்படி வைக்கக் கூடாது. காற்று புகாத கலன்களில் குளிர்ச்சியான இடங்களில் வைப்பது சிறந்தது.
3. களஞ்சியப்படுத்தும் போது கிளாஸ் அல்லது மெட்டல் பாத்திரங்களை பயன்படுத்துவது சிறந்தது.
4. பொடிகளை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை விட முழு மசாலா பொருட்களை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனின் பொடி வாங்கி வைக்கும் பொழுது அது பழுதாக வாய்ப்பு இருக்கின்றது.
5. சமையல் அறையில் ஈரம் படக் கூடிய இடங்களில் மசாலாக்களை வைக்காமல் இருப்பது நல்லது.
6. கடைகளில் இருந்து வாங்கும் மசாலா பொருட்களின் கலாவதியாகும் திகதி, அதன் பெயர் என்பவற்றை சிறு துண்டில் எழுதி வைப்பது நல்லது.
7. மசாலாக்களை மறந்தும் இரும்பு பாத்திரங்களில் போட்டு விடாதீர்கள். இதன் பின்விளைவுகள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |