ஆரோக்கியம் நிறைந்த குதிரை வாலி, கேப்பை கூழ் தயாரிப்பது எப்படி?
சிறுதானிய வகைகளில் அளவில் மிகச்சிறியதான குதிரை வாலியில், எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை குதிரைவாலியில் அதிகமாக உள்ளது.
இதுதவிர பி-கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் அடங்கி உள்ளன.
இதனை கொண்டு சுவையான கூழ் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 200 கிராம்
குதிரைவாலி அரிசி - 50 கிராம்
தயிர் - கால் கப்
சின்ன வெங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முந்தைய நாள் இரவு கேழ்வரகு மாவை தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைத்துக் கொள்ளவும், ஏனென்றால் அப்போது தான் நன்றாக புளித்துவிடும்.
குதிரைவாலி அரிசியை நன்றாக களைந்து விட்டு வேகவைத்துக் கொள்ளவும், அரைப்பதத்தில் வந்தவுடன் ஊறவைத்த கேழ்வரகு மாவை சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கிளறிவிடவும்.
கூழ் பதத்துக்கு வந்தவுடன், பொடியாக நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் மற்றும் தயில் சேர்த்து கலக்கினால் சுவையான கூழ் தயார்!!!