சாப்பிடும் போது இந்த தவறை செய்யாதீங்க... உயிருக்கே உலை வைத்துவிடும்
நாம் சாப்பிடும் போது செல்போனில் கவனம் செலுத்துவது, மற்றவர்களிடம் பேசுவது என பல விடயங்களை செய்து வருகின்றோம். அவ்வாறு செய்வது உயிருக்கு ஆபத்தில் சென்று முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
சாப்பிடும் போது தவறை செய்யாதீங்க
சாப்பிடும் போது இன்று செல்போன் பார்ப்பது, டிவி பார்ப்பது, பேசிக்கொண்டு சாப்பிடுவது என்று பழக்கப்படுத்தி வைத்துள்ளனர். ஆனால் இது பாரிய சிக்கலில் கொண்டு விடும்.
நமது உடம்பில் மூச்சுக்குழல் உணவுக்குழல் இரண்டும் வெவ்வேறு வால்வுகளைக் கொண்டுள்ளது. நாம் உணவுப்பொருட்களை மெல்லும் போது மூச்சுக்குழல் திறந்திருக்கும்... அதன் வழியாக சுவாசிப்போம். ஆனால் நாம் விழுங்கும் போது உணவுக் குழல் திறந்து கொள்ளுமாம். இத்தருணத்தில் மூச்சுக்குழல் மூடிக்கொள்ளும்.
நாம் சாப்பிடும் உணவானது மூச்சுக்குழாயில் செல்லாமல் இருப்பதற்கு இயற்கையாகவே இவ்வாறு காணப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில் நாம் பேசிக்கொண்டே சாப்பிடும் போது நமக்குத் தெரியாமல் வாய் வழியாக காற்று உள்ளே சென்றுவிடுகின்றது.
இத்தருணத்தில் நாம் மென்ற உணவை விழுங்க முயலும் போது அதில் காற்று இருப்பதால் உணவு குழல், மூச்சுக் குழல் இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் உணவு குடலில் செல்ல வேண்டிய உணவு தவறி மூச்சுக் குழலில் செல்ல வாய்ப்பு இருக்கிறது
இதனால் தொண்டை அடைத்து மூச்சு திணறல் ஏற்படுவதுடன், அது உயிருக்கே ஆபத்தில் கொண்டு விடும். ஆகவே தான் உணவருந்தும் போது பேசக்கூடாது என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |