அருகில் இருப்பவன் திருடன் என தெரியாமல் பேசிய பெண்கள்: வைரல் வீடியோ
உணவகம் ஒன்றில் பதிவான சிசிடிவி வீடியோவில், ஹெல்மெட் அணிந்திருந்த திருடன், உணவு டெலிவரி செய்யும் பணியாளர் போல் நடித்து, அங்கு உணவு அருந்திக் கொண்டிருந்த பெண்மணியின் செயினை பறித்துச் சென்ற வீடியோ அளவில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
அந்த வீடியோவில் குழுவாக சில பெண்கள் உணவகத்தினுள் உணவருந்திக்கொண்டு தங்களுக்குள் உரையாடிக் கொண்டுள்ளனர்.
ஹெல்மெட்டுடன் ரெஸ்டாரண்ட்டுக்குள் மிக நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கும் அந்த திருடன், தனக்கு அருகில் குழுவாக உணவருந்திக் கொண்டிருத்த பெண்களை அவர்களுக்கே தெரியாமல் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.
அந்தப் பெண்களும் தனக்கு அருகில் இருப்பவன் திருடன் என அறியாமல், டெலிவரி பாய் என்று நினைத்து மிகவும் சாதாரணமாக தங்களுக்குள் உரையாடலை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் கவனம் திசை திரும்பும் வரை நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்த அந்த திருடன், சரியான சமயம் பார்த்து அந்த பெண்மணி அசந்த நேரத்தில் அப்பெண்மணியின் கழுத்தில் இருந்து செயினை பறித்துக் கொண்டு அதிவேகமாக தப்பி ஓடி விடுகிறான்.குறிப்பிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
हरियाणा के पानीपत में एक रेस्टोरेंट के भीतर चेन स्नैचर का दुस्साहस देखिए। pic.twitter.com/WLuLYzycJe
— SANJAY TRIPATHI (@sanjayjourno) June 8, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |