பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மற்றொரு புதிய நிகழ்ச்சி... பிரபல ரிவியின் ரகசியத்தை புகைப்படமாக வெளியிட்ட நடிகை
மக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக திகழும் ரிவிகளில் ஒன்று தான் விஜய் தொலைக்காட்சி. எப்பொழுதும் நம்பர் ஒன் இடத்தினை தக்கவைத்திருக்கும் இந்த தொலைக்காட்சிக்கு பதிலாக பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டு வருகின்றன. ஆனாலும் தனது இடத்தினை தக்கவைத்துக்கொள்ள புது புது யோசனைகள் மூலம் பல புதிய நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தி ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது எங்க வீட்டு மகாலட்சுமி என்ற நிகழ்ச்சி மிக விரைவில் தொடங்கவுள்ளதாக நடிகை தீபா நேத்ரூன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தில், பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர், பாவம் கணேசன் போன்ற பல சீரியல்களில் இருந்து நடிகைகள் நடித்துள்ளதோடு, ஈரமண ரோஜா, வேலைக்காரன், மௌன ராகம், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களில் நடிக்கும் நடிகைகள் இந்த எங்க வீட்டு மகாலட்சுமி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.