உடலில் கொழுப்பை வேகமாக குறைக்க வேண்டுமா? இந்த பழக்கங்கள் மிக முக்கியம்
உடல் கொழுப்பை வேகமாக கரைக்க உதவும் பழக்கங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் எடை அதிகரிப்பு காரணமாக இன்று பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். எடையைக் குறைப்பதற்கு பல உணவுக்கட்டுப்பாடு, தீவிர உடற்பயிற்சி இவற்றினை மேற்கொண்டு வருகின்றனர்.
பிட்னஸ் பயிற்சியாளர் ஒருவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் உடல் எடை குறைப்பிற்கான சில டிப்ஸினை கொடுத்துள்ளார்.
அதாவது அன்றாடம் நாம் எடுத்தக் கொள்ளும் பழக்கங்கள் உடல் எடையைக் குறைக்கும். அந்த வகையில் 7 பழங்களைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
என்ன செய்ய வேண்டும்?
தினமும் 10 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ஸ்டெப் நடப்பதை பழக்கிக் கொள்ள வேண்டும். இதனால் கொழுப்பு கரைவதுடன், மனநிலையும் சீராகவும், ஆற்றலுடன் இருக்குமாம். மூட்டு வலியும் வராதாம்.
தினமும் 100 முதல் 140 கிராம் வரையிலான புரதச்சத்து உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை தசைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், பசியைக் குறைத்து வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகின்றது.
ஜிம்மிற்கு வாரம் 3 நாட்கள் சென்று Strength பயிற்சி மேற்கொள்வதால் தசைகள் வளர்ச்சி அடைவதுடன், கொழுப்பை கரைக்கவும் உதவியாக இருக்கும்.
ஆற்றலுடன் இருப்பதற்கு தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். சிலர் தண்ணீர் தாகத்தை பசி என்று நினைத்து அதிகமாக உணவு எடுத்துக் கொள்வார்கள். இது தவறான பழக்கமாகும்.
தினமும் 7-8 மணிநேரம் இரவு நேரத்தில் தூங்கவும்.கொழுப்பு குறைப்பில் இது பெரியளவுக்கு உதவும். சரியாக தூங்காவிட்டால் அடிக்கடி பசி எடுப்பதுடன், எடை குறைப்பு செயல்பாட்டில் இறங்க முடியாது.
மூன்று அல்லது நான்கு வேலை ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளலாம். இடையில் அடிக்கடி நொறுக்குத் தீனி சாப்பிடுவதும் கலோரியை அதிகரிக்கச் செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |