பூஞ்சை தொற்றுகளுக்கு மருந்தாகும் FLUCONAZOLE மாத்திரைகள்
பூஞ்சை நோய்த்தொற்றுகளுக்கு எதிராக செயல்படுகிறது FLUCONAZOLE மாத்திரைகள்.
தோல் நோய்களுக்கு தீர்வை தரும் FLUCONAZOLE மாத்திரைகள், பூஞ்சை கிருமிகளை அழித்து பல்கிப் பெருகுவதையும் தடுக்கிறது.
Cryptococcal meningitis மற்றும் Coccidioidomycosis போன்ற நோய்த்தொற்றுகளுக்கு மருந்தாகிறது.
இதுதவிர அந்தரங்க உறுப்புகளில் தொற்றுகள், உடல் உள்ளுறுப்புகளில் தொற்றுகள், விளையாட்டு வீரர்களுக்கான பாதங்களில் தொற்று போன்ற பல நோய்த்தொற்றுகளுக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
FLUCONAZOLE மாத்திரைகளை மருத்துவர்கள் உங்களுக்கு பரிந்துரைத்தால், அவர் குறிப்பிட்டு சொல்லும் நாட்களுக்கு குறிப்பிட்ட அளவுகளில் எடுத்துக் கொள்ளவும்.
FLUCONAZOLE மாத்திரைகளை பயன்படுத்தும் முன்னர் கல்லீரலின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்கள் அறிந்து கொள்வார், மாத்திரைகள் பயன்படுத்தும் போது மஞ்சள் நிற கண்கள், தோலில் மஞ்சள் நிறம், அடர்நிறத்தில் சிறுநீர், வயிற்று வலி தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரிடம் தெரியப்படுத்தவும்.
இதுதவிர காய்ச்சலுடன் கூடிய தீவிர தொற்றாக இருந்தாலும் மருத்துவரிடம் செல்லவும்.
கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போடும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலும் நிச்சயம் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
மிக அரிதான பக்கவிளைவாக முடிகொட்டுதல் இருக்கலாம், இது தொடர்ந்தாலும் மருத்துவரிடம் கூறவும்.
மாத்திரைகளை பயன்படுத்தும் போது உங்களுக்கான தொந்தரவுகள் குறையும் பட்சத்தில் அப்படியே விட்டுவிட வேண்டாம், மருத்துவர் பரிந்துரைத்த நாட்களுக்கு கண்டிப்பான முறையில் எடுத்துக் கொள்ளவும்.
ஒருவேளை நீங்கள் முன்கூட்டியே நிறுத்திக்கொண்டால் தொற்றுப்பிரச்சனைகள் பெரிதாகலாம் அல்லது மேலும் சிக்கல்களை உண்டு பண்ணலாம்.
சிறுநீரக பாதைத் தொற்றுக்கும் மருந்தாக FLUCONAZOLE மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது, எனினும் இது பக்டீரியா தொற்றாக கூட இருக்கலாம், எனவே மருத்துவரை பார்த்து பக்டீரியா, பூஞ்சை தொற்றா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
பொதுவான பக்கவிளைவாக உங்களை சோர்வுரச் செய்யும், அதிகளவில் சோர்வாக நீங்கள் உணர்ந்தாலும் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
கர்ப்பமாக இருக்கும் போது FLUCONAZOLE மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம், இது கருவில் வளரும் குழந்தைக்கு ஆபத்தை உண்டுபண்ணும், FLUCONAZOLE மாத்திரைகள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதும் நீங்கள் கர்ப்பம் தரித்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும்.
தாய்ப்பாலூட்டும் பெண்ணாகவோ, கர்ப்பம் தரிக்க திட்டமிடும் பெண்ணாகவோ இருந்தாலும் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
குறிப்பு- எந்தவொரு மருந்தையும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக எடுத்துக் கொள்வது ஆபத்தானதே!!!