மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு கொடுக்கும் பூ.. உங்க வீட்டில் இருந்தால் செய்து பாருங்க
எமது சூழலில் தினமும் பார்க்கும் பூக்களில் நிறைய பலன்கள் உள்ளன.
இவை வெறும் அழகிற்காகவும், வாசணைக்காகவும் வைக்கப்பட்டவை அல்ல, மாறாக இதிலுள்ள மருத்துவ குணங்கள் ஆங்கில மருந்துகளால் கூட கொடுக்க முடியாது.
பாரம்பரிய கலாச்சாரங்களை தவிர்த்து ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவம் ஆகியவற்றிற்கு பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நாளாந்தம் பார்த்து அழகாக ரசிக்கும் பூக்களில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வீக்க எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
அந்த வகையில், மருத்துவ பண்புகளுடன் இருக்கும் பூக்கள் என்னென்ன என்பதையும், அவற்றை என்னென்ன நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் என்பதையும் பதிவில் பார்க்கலாம்.
1. செம்பருத்தி
கண்ணைக் கவரும் நிறத்தில் இருக்கும் செம்பருத்தி பூக்கள் தலைமுடி, சருமம் பாதுகாப்பிற்கு உதவியாக இருக்கிறது என கேட்டிருப்போம். ஆனால் இதிலுள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, கொலஸ்ட்ரால் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. அதே போன்று செம்பருத்தி பூக்கள் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றி விடுகிறது. செம்பருத்தி பூக்களை தேநீராக கூட எடுத்துக் கொள்ளலாம்.
2. சாமந்தி
வீக்க எதிர்ப்புப் பண்பு கொண்ட பூக்களில் இதுவும் ஒன்று. இதனை எடுத்து கொள்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது குறைவாக இருக்கும். செரிமான பிரச்சினையுள்ளவர்கள் சாமந்தி பூவை எடுத்து கொண்டால் சிறந்த தீர்வு கிடைக்கும். ஃபிளவனாய்டுகளும், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இந்த பூவில் அதிகமாக இருப்பதால் செல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வரும் வலிக்கு கூட நிவாரணம் கொடுக்கிறது. இந்த பூவை நேருடன் அல்லது எண்ணெய்யாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
3. ரோஜா
ரோஜா பூ என்றாலே பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். மனசோர்வு, பதட்டம், பயம் போன்ற மன ரீதியான பிரச்சினைகளுக்கு ரோஜா பூ நிவாரணம் கொடுக்கிறது. சருமத்தின் ஆரோக்கியத்தை இரட்டிப்பாக்கி பளபளப்பாக்கும் வேலையை செய்யும். மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்கள் ரோஜா பூ தேநீர் குடிக்கலாம். ஹார்மோன் சமநிலை பிரச்சனையுள்ளவர்களுக்கு இது தீர்வாக இருக்கும். இதிலுள்ள இதழ்களை உலர விட்டு இனிப்பு சேர்த்து குடிக்கலாம். ரோஸ் வாட்டர் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |