ஸ்மார்ட்போன்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட FLIPKART நிறுவனம்.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்
இன்றைய ஆன்லைன் நிறுவனங்கள் பல விதமான ஆஃபர்களை வழங்கி வருகிறது.
அதிலும் தற்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்ட ஆஃபர் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அவை பிரீமியம் ஸ்மார்ட் ஃபோன்களை வாங்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்திய 15 நாட்களுக்குள், வாங்கிய போது, செலுத்திய முழு பணத்தையும் திரும்ப பெறுவதற்கான ‘லவ் இட் ஆர் ரிட்டர்ன் இட்’ (Love it or return it) என்ற புதிய திட்டத்தை பிளிப்கார்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் பிளிப்கார்ட் மூலம் ஹை எண்ட் மாடல் ஃபோனை வாங்கும் ஒரு வாடிக்கையாளர், அந்த டிவைஸை 15 நாட்களுக்குள் ரிட்டர்ன் செய்வதோடு வாங்கிய மதிப்பில் முழுப் பணத்தையும் திரும்ப பெற (Refund) முடியுமாம்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பிளிப்கார்ட் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
மேலும் Galaxy Z Fold 3 மற்றும் Z Flip 3 ஆகிய இரண்டு பிரீமியம் ஸ்மார்ட் ஃபோன்களும் (Love it or return it) திட்டத்தின் கீழ் பிளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த திட்டத்தில் ஸ்மார்ட்போன் ரிட்டர்ன் முயற்சியின் போது டிவைஸிற்கு சேதம் ஏதும் ஏற்படாமல் இருக்கிறதா, முழுமையாக வேலை செய்யும் நிலையில் உள்ளதா என்பது
உள்ளிட்ட சில குவாலிட்டி செக்கப்பிற்கு பிறகு, யூஸர்கள் ஸ்மார்ட் ஃபோன் வாங்க செலவிட்ட முழுப் பணத்தையும் திரும்ப பெறுவார்கள்.