இனி இங்கு எல்லாம் சென்றால் விமானத்தில் சாப்பாடு கிடையாது.. மத்திய அரசின் புதிய அறிவிப்பு!
கொரோனா பரவல் தற்போது உலகமெங்கும் வேகமெடுத்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழத்தில், சென்னையிலிருந்து டெல்லி போன்ற நகரங்களுக்குப் பயணம் செய்யும்போது பயண நேரம் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்தால், அத்தகைய விமானச் சேவைகளில் உணவு அளிக்கலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஆனால், சென்னையிலிருந்து பெங்களூரு அல்லது மதுரை போன்ற நகரங்களுக்குப் பயண நேரம் இரண்டு மணி நேரத்துக்குக் குறைவாக இருக்கும் என்பதால், அத்தகைய விமானச் சேவைகளில் உணவுப் பொருட்களை விற்கவோ அல்லது இலவசமாக விநியோகிக்கவோ தடை செய்யப்படுகிறது.

மேலும், இந்தக் கட்டுப்பாடு உள்நாட்டு விமானச் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்குச் செல்லக்கூடிய விமானச் சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது.
உணவு உண்ணும் நேரத்திலே பயணிகள் தங்களுடைய முகக்கவசத்தை அகற்றி விடுவார்கள் என்பதால், அத்தகைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.