கதறிய குழந்தையை தோளில் சாய்த்து ஆறுதல் கூறிய விமான ஊழியர்! இதயங்களை வென்ற காட்சி!
விமானத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. குழந்தைகள் செய்யும் சேட்டைகள் நம்மை மெய் மறக்க செய்யும்.
ஆனால் அழுது கொண்டிருக்கும் குழந்தையை நாம் சமாதானம் செய்வது என்பது மிகப்பெரிய டாஸ்க் தான். அந்த செயலை வெற்றிகரமாக விமான ஊழியர் ஒருவர் செய்து பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
இந்த வீடியோவை அந்த குழந்தையின் தந்தை ஜீவன் வெங்கடேஷ் என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அந்த விமான ஊழியரான நீல் மால்கம் என்பவர் குழந்தையை தூக்கி தனது தோளில் போட்டுகொண்டு ஒரு கையால் குழந்தையின் முதுகு பக்கத்தில் மெதுவாக தட்டி கொடுத்து கொண்டு விமானத்திற்குள் அங்குமிங்குமாக மெதுவாக நடந்துகொண்டே இருக்கிறார்.
இவரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அதிகமாக இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.