உடல் எடையை கடகடவென குறைக்கனுமா? இந்த காய்கறிகள் மட்டும் போதுமாம்
உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும் முக்கியமான 5 காய்கறிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் எடை
இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் உடல் எடையினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் உடல் உழைப்பு இல்லாத வேலைகள் பெருகிவிட்டதே ஆகும்.
உடல் எடை அதிகரித்துவிட்டால், நீரிழிவு நோய் முதல் மாரடைப்பு வரை பல வியாதிகள் வந்துவிடுகின்றது.
ஆதலால் தற்போது பெரும்பாலான நபர்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு உடற்பயிற்சி மேற்கொள்வதுடன் பணத்தை அதிகமாக செலவு செய்து மருந்தும் வாங்கி சாப்பிடுகின்றனர்.
ஆனால் உடல் எடையைக் குறைப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய காய்கறிகளைக் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
எடையைக் குறைக்கும் காய்கறிகள்
கீரை உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகின்றது. உடலில் உள்ள கொழுப்பைக் கரைப்பதுடன், தொப்பையைக் குறைக்க உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளில் ஒன்றான கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் குறையும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றதாம்.
சைவம் மற்றும் அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான காளான் உடல் எடையைக் குறைப்பதுடன், கொழுப்பை எரிக்கவும் உதவுகின்றது. காளான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், அதிகளவு புரதச்சத்தையும் கொண்டுள்ளது. உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் செய்கின்றது.
வைட்டமின் சி மற்றும் கலோரிகள் அதிகம் கொண்ட குடைமிளகாய் உடல் எடையைக் குறைப்பதற்கு, கொழுப்பை கரைக்கவும் உதவுகின்றது.
குறைந்த கலோரிகள் கொண்ட காலிப்ளவரை உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதில் கொலஸ்ட்ரால் இல்லாமலும், சோடியமும் குறைவாகவே இருக்கும். இதிலுள்ள வைட்டமின் சி தசை மற்றும் எலும்புகளை வலுவாக்க உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |