அழகான மீன் வியாபாரி பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! குவியும் வாழ்த்துக்கள்
இணையத்தை கலக்கும் “உலகிலேயே மிக அழகான மீன் வியாபாரி பெண்” புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் தற்போது பரவி வருகிறது தாய்வான் சாங்ஹவுவா மாவட்டத்தை சேர்ந்த லியு பெங்பெங்(26) என்ற இளம்பெண்ணின் தாயார் மீன் விற்று வருகிறார்.
இந்நிலையில், லியு பெங்பெங் தனது தாயிக்கு உதவும் வகையில், தனது தாயின் மீன் கடையில் மீன் வியாபாரம் செய்துள்ளார். அப்போது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவரின் புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டுள்ளனர்.
அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் பயங்கர வைரலாக பரவியுள்ளது. தனது 26 வயதில் உலகிலேயே மிக அழகான மீன் வியாபார பெண் என்ற பெயரில் பிரபலமாகியுள்ளார்.
இது குறித்து லியு தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கையில், என் குடும்பம் நான்கு தலைமுறைகளாக மீன் விற்பனை செய்து வருகிறது.
வணிகம் நல்ல முறையில் இருப்பதற்கு, இங்கு உள்ள நிறையப் பேர் இப்போது தங்கள் தொலைபேசிகளில் என்னை படப்பிடிப்பு செய்வதில் பிஸியாக இருக்கிறார்கள். என் அம்மாவிடமிருந்து அவர்கள் அதிக மீன் வாங்குவதை நான் விரும்புகிறேன், என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது அன்னைக்காக சந்தையில் பணிபுரிவதை தொடர்வதாகவும் அவர் உறுதியளித்தார்.