மிரண்டு போன மீனவர்கள்.... ஒரே ஒரு மீன் ரூ.36 லட்சத்திற்கு விலை போன ஆச்சரியம்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
மீனவர்கள் பிடித்த பெரிய மீன் அதிக விலைக்கு விற்பனையான சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சுந்தர்பன்ஸ் பகுதியைச் சேர்ந்த பிகாஷ் பர்மன் என்ற மீனவர் ஒருவர் ஆற்று பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அவர் வலையில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது.
அவரும் அவரது குழுவினரும் சேர்ந்து வலையில் சிக்கிய அந்த மீனை கஷ்டப்பட்டு படகிற்கு மீட்டுள்ளனர்.
படகிற்கு வந்ததும் அந்த மீனை பார்த்த அவர்கள் மிரண்டு போய் விட்டனர். அந்த மீன் "டெலியா போலா" என்ற வகை மீனாகும்.
இது மிகப்பெரிய வகை மீன் இந்த மீனை அவர் மொத்த விற்பனை மார்கெட்டிற்கு கொண்டு வந்தபோது மார்கெட்டில் அந்த மீன வாங்க பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இறுதியாக சுமார் 7 அடி நீளம் கொண்ட இந்த மீன் ரூ36 லட்சத்திற்கு விற்பனையானது கொல்கத்தாவைச் சேர்ந்த கேஎம்பி என்ற நிறுவனம் இந்த மீனை விலைக்கு வாங்கியது. இந்த மீன் கிலோ ரூ49,300 என்ற விலையில் விற்பனையாகியுள்ளது.
இதேவேளை, இந்த மீனின் வயிற்றில் இருந்த ஒரு விதமான மருத்துவ குணம், பல விதமான மருந்துகளை தயாரிக்க உதவுமாம். அதனால் அதிக விலையில் விற்பனையாகியுள்ளது.