வீட்டில் மீன் வளர்க்குறிங்களா?
வீட்டை அழகாக்கவும் பொழுதுபோக்குக்காவும் என்னவெல்லாமோ செய்கின்றோம். செடிகள் வளர்ப்போம். செல்லப் பிராணிகள் வளர்ப்போம். குறிப்பாக மீன் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
மீனை வாங்கினோம் அதை வீட்டின் எங்கோ ஓர் மூலையில் வைத்தோம் என்று இல்லாமல், அதை வைப்பதற்கும் சில வாஸ்து முறைகள் உள்ளன. குறிப்பாக மீன் தொட்டியை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. அதை சரியா இடத்தில் வைப்பதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்.
சரி இனி வீட்டில் மீன் தொட்டியை வைக்கும்போது என்னென்ன விடயங்களை கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம்.
எங்கு வைப்பது சரி?
வீட்டின் கூடம் அல்லது படிக்கும் அறையில் வைப்பதுதான் சிறந்தது. இல்லையென்றால் அது வீட்டில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
எந்த திசையில் வைப்பது சிறப்பானது?
நீருடன் தொடர்புடைய எந்த பொருளையும் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு போன்ற திசைகளில் வைப்பதுதான் சிறந்தது. இவ்வாறு வைப்பதால்தான் வீட்டில் நேர்மறையான ஆற்றல் அதிகரிப்பதோடு, செல்வமும் அதிகரிக்கும்.
அடிக்கடி நீரை மாற்ற வேண்டும்
மீன் தொட்டியில் உள்ள நீர் நீண்ட காலம் மாற்றாமல் இருந்தால் வீட்டின் நிதி நிலையில் எவ்வித முன்னேற்றமும் இருக்காது. அதேபோல் மீன் தொட்டியில் பாசி படிய விட்டாலும் செய்யும் வேலையில் தடைகளை சந்திக்க நேரும்.
மீன்களின் எண்ணிக்கை
மீன் தொட்டியில் 9 மீன்கள் இருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதில் 8 கோல்டன் மீன்களும் 1 கருப்பு மீனும் இருக்க வேண்டுமாம். இந்த எண்ணிக்கையில் மீன்கள் இருந்தால், வீடு நேர்மறை ஆற்றலால் நிரம்பியிருக்கும். எப்பொழுதும் மீன் தொட்டியில் ஒற்றைப்படையில் மீன்கள் இருக்க வேண்டும்.