ஹொட்டலில் சாப்பிடும் போது தட்டில் உயிரோடு துள்ளிய மீன்! காரணம் என்ன தெரியுமா?
உணவகத்தில் சாப்பிடுவதற்கு கொடுக்கப்பட்ட மீன் உயிருடன் துள்ளிய சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது.
தட்டில் துள்ளிய மீன்
பொதுவாக காய்கறிகள், அசைவ உணவுகள் இவற்றினை சமைத்து தான் சாப்பிட வேண்டும். சிலர் அரைகுறையாக வேக வைத்து சாப்பிடவும் செய்வார்கள். ஆனால் ஜப்பான் உணவகம் ஒன்றில் சாப்பிடுவதற்கு சமைத்து கொடுக்கப்பட்ட மீன் துள்ளியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானிய உணவகத்தில் வாடிக்கையாளருக்கு மீனும், சாலட்டும் வழங்கப்படுகிறது. அப்போது மீன் அவர் கையில் இருந்த சாப்ஸ்டிக்கை கவ்வி பிடித்து தொங்குகிறது. முதலில் இந்த வீடியோ கடந்தாண்டு பிப்ரவரியில் தகாஹிரோ என்பவரால் வெளியிடப்பட்டது.
குறித்த காட்சியை மீண்டும் பதிவு செய்யப்பட்டதிலிருந்து, கிட்டத்தட்ட 9.5 மில்லியன் பார்வைகளை பெற்றதுடன், 71.2k லைக்ஸையும் குவித்து வருகின்றது.
இதனை அவதானித்த நபர் கூறுகையில், தான் 20 ஆண்டுகளாக சமையல் தொழிலில் இருப்பதாகவும், அதில் பொறுப்பும், ஆபத்தும் அதிகம்... தங்களுக்கு வழங்கப்படும் உணவு சரியாக சமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்தி பின்பு சாப்பிடுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த காணொளியினை அவதானித்த சிலர், ப்ரெஷாக கேட்டிருப்பார்கள்... அதனால் தான் ப்ராஷா உயிருடன் கொடுத்துள்ளனர் என்று கூறி வருகின்றனர்.
Fish served at restaurant bites chopstick? pic.twitter.com/PnkG6xt1Ig
— OddIy Terrifying (@OTerrifying) February 13, 2023