உடல் எடையைக் குறைக்க சிறந்தது மீனா அல்லது சிக்கனா? எதை சாப்பிட்டால் எடை குறையும்
உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள்.
ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும். விரைவாக உடல் எடையை குறைக்க, சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவைக் குறைக்க வேண்டும். ஆனால் அசைவ ப்ரியர்கள் உணவைக் கட்டுப்படுத்தி எடையைக் குறைப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.
அந்தவகையில், எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு விரைவில் எடை குறைய மீன் சிறந்ததா அல்லது சிக்கன் சிறந்ததா என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
உடல் எடை குறைய சிறந்தது மீன் or சிக்கன்
உடல் எடையைக் குறைக்க முயற்சித்தால், க்ரில்டு சிக்கன் மற்றும் க்ரில்டு மீன் ஆகிய இரண்டுமே எடை இழப்பிற்கு உதவும்.
உடல் எடை குறைப்பதற்கு சிறந்ததாக சிக்கனின் நெஞ்சுக்கறி கருதப்படுகிறது. வேகவைத்த சிக்கன் மற்றும் குறைந்த உப்பு கொண்ட சிக்கன் சூப்களும் எடையைக் குறைக்கும் என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்.
சிக்கனை விட மீன்களில் உள்ள அத்தியாவசிய ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
மீன் மற்றும் சிக்கன் இரண்டும் உங்கள் எடை இழப்பு உணவில் சேர்க்க சிறந்த உணவுகள் அதனால் நீங்கள் இரண்டையும் சாப்பிடலாம்.
வறுத்த அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தேர்வு செய்ய வேண்டாம். அவற்றை நீராவி அல்லது கிரில் செய்து சாப்பிடுவது நல்லது. அதிகப்படியான புரதம் உடலில் சேமித்து வைக்கப்படுவதால், உடல் எடை கூடும் அதனால் அளவோடு எடுத்துக் கொள்வது அவசியம்.
உடல் எடையை குறைக்க வாரத்திற்கு மூன்று முறை மீன்களை உட்கொள்ள வேண்டும் ஆய்வு பரிந்துரைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |