மசாலா மீன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்கள்... இனி ஓட்டலே தேவையில்லை?
food
fish
fish fry recipe
By Nivetha
மீன் வறுவல் சுவையான மற்றும் இல்லை சத்தான ஒரு உணவு.
மீனிலிருந்து தயார் செய்யப்படும் உணவு வகைகளில் மீன் வறுவல் பலருக்கும் பிடித்த உணவாகும்.
இன்று மீன் வறுவல் எப்படி ஓட்டல் சுவையில் வீட்டிலேயே செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- மீன் துண்டுகள்
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1தேக்கரண்டி
- சிறிய வெங்காயம் – 8
- கருவேப்பிலை – சிறிதளவு
- மல்லிதழை – சிறிதளவு
- எலுமிச்சம்பழசாறு – 2 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
- சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
- மைதா – 4 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிக்க

செய்முறை
வெங்காயம், கருவேப்பிலை, மல்லிதழை ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சம்பழசாறு ,மிளகாய்த்தூள்,சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, அரைத்த மசாலா சேர்த்து திக்கான மசாலா செய்து கொள்ளவும்.
மீன் துண்டின் இரு புறங்களிலும் மசாலா கலவையை தடவி விடவும்.
அதன் மேலே மைதா மாவை தூவி 1 மணி மேரம் வரை ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் , மிதமான சூட்டில் மீனை இரு புறமும் பொரித்தெடுக்கவும்.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US