மாலை வேளையில் அருமையான ஸ்நாக்ஸ் மீன் கட்லெட்! சில நிமிடங்களில் தயாரிப்பது எப்படி?
பொதுவாக பெரும்பாலானோர் உருளைக்கிழங்கு கட்லெட் தான் அனைவரது மத்தியிலும் மிகவும் பிரபலமானது. ஆனால் மீனை வைத்து கட்லெட் செய்வது மிகவும் அரிதானது.
ஏனெனில் அதில் முள் இருப்பதால், பெரும்பாலானோர் மீன் கொண்டு கட்லெட் செய்யமாட்டார்கள்.
இன்று நாங்கள் மீன் கட்லெட் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருள்
- முள் இல்லாத மீன் துண்டுகள் - 200 கிராம்
- வேகவைத்த உருளைக்கிழங்கு - 1
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
- மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம்மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
- பிரெட் தூள் - சிறிது
- முட்டை - 2
- பாண் தூள்
- எண்ணெய் -தேவைக்கேற்ப
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
1. மீனை சுத்தம் செய்து வேக வைத்து அதில் உள்ள முட்களை எடுத்து ஒன்று இரண்டாகப் பிசைந்து கொள்ளவும்.
2. பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து வெங்காயம் சேர்ந்து மிதமாக வதங்கியதும், மீன், மசாலாத்தூள், உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்றாக வதக்கி இறக்க வேண்டும்.
3. பின்னர் ஆறியதும் அதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
4. பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி கட்லெட்டாக தட்டிக் கொள்ள வேண்டும்.
5. பின்னர் முட்டையை ஒரு தனி பாத்திரத்தில் உடைத்து ஊற்றிக்கொள்ள வேண்டும்.
6. அந்த முட்டை கலவையில் உருண்டைகளை நனைத்து பாண் தூளில் பிரட்டி எடுக்க வேண்டும்.
7. இப்போது சூடான எண்ணெயில் பொன்நிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
இப்போது சூடான மீன் கட்லெட் தயார். சட்னியுடன் சேர்ந்து சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும்.