கமகம வாசணையுடன் காரசாரமான மீன் குழம்பு செய்ய தெரியுமா? சூப்பரான ரெசிமி இதோ!
பொதுவாக மற்றைய உணவுகளை விட கடல்வாழ் உயிரினங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் நாக்கில் அறுச்சுவையையும் நாட்டியமாட வைக்கிறது.
இதன்படி, கடல்வாழ் உயிரினங்களை உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் தவிர்க்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனின் இதிலிருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.
அந்தவகையில், இஞ்சி, பூண்டு தட்டிப் போட்டு காரசாரமான மீன் குழம்பு செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
சரக்குத்தூளுக்கு தேவையான பொருட்கள்
மிளகு - 1 தேக்கரண்டி.
பூண்டு - 8 பல்.
மிளகாய்த் தூள் - 1.5 தேக்கரண்டி.
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி.
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1 பெரியது.
குழம்பு தாளிப்புக்கு தேவையான பொருட்கள்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1.
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
மற்றைய பொருட்கள்
புளி -1 மற்றும் எலுமிச்சை - தேவையானளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
உப்பு - கறிக்கு தேவையான அளவு
தயாரிப்பு முறை பார்க்கலாம்
முதலில் கறிக்கு தேவையான மீன் முதற்கொண்டு காய்கறிகள் வரை சுத்தப்படுத்தி, நறுக்க வேண்டியவைகளை தயார் செய்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மெல்லிய தணலில் சூடாக்கி அதில் தாளிப்புப் பொருட்களை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை தாளிக்க வேண்டும்.
இதில் சேர்ப்பதற்காக புளியை நன்றாக தண்ணீர் விட்டு கரைத்து, இதனுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் ஆகிய வற்றைக் கலந்து, அந்த கலவையுடன் தேவையான தண்ணீர் கலந்து, மசாலாவிலுள்ள பச்சை வாசம் நீங்கும் கறியை கொதிக்க விட வேண்டும்.
ஒரு 5 நிமிடத்திற்கு பிறகு கடாயிலுள்ள மூடியை அகற்றும் போது குழம்பு வாசம் மூக்கைத்துளைக்கும், அப்போது அதில் மீன் துண்டுகளை சேர்த்து, மீண்டும் மூடி போட்டு 5 நிமிடம் மிதமான வெப்பநிலையில் வேகவிட வேண்டும்.பின்பு தேவை ஏற்படின் எலுமிச்சைசாற்றை லேசாக துளிகள் இட வேண்டும்.
தற்போது ஆவலுடன் எதிர்பார்த்த காரசாரமான கமகம மீன் குழம்பு தயார்!