Water Menu: தண்ணீருக்கு மெனு வைத்த ஹோட்டல்.. யாரெல்லாம் குடிக்கலாம், எங்குள்ளது தெரியுமா?
பிரித்தானியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தண்ணீருக்கான மெனு கொடுக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
தண்ணீர் மெனு அறிமுகம்
வழக்கமாக நாம் சாப்பிடுவதற்காக செல்லும் உணவகங்களில் அங்குள்ள சிறப்பான உணவுகள் அல்லது நாம் கேட்கும் உணவுகளின் பட்டியல்கள் அடங்கிய மெனு அட்டைகள் கொடுப்பார்கள்.
அதே போன்று தண்ணீர் என்றால் ஜஸ் போட்ட தண்ணீர் அல்லது சுடுநீர் வாங்கி குடிப்போம். ஆனால் தண்ணீருக்கு என தனி மெனு பார்த்திருக்கமாட்டார்கள்.
மாறாக, பிரித்தானியாவில் உள்ள பிரெஞ்சு பாணி உணவகமான La Popoate-வில் sommelier Doran Binder என்பவரால் உருவாக்கப்பட்ட தண்ணீர் மெனு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தண்ணீருக்கு மெனு வழங்கும் ஹோட்டல் உலக நாடுகளில் சில நாடுகளில் இருந்தாலும் பிரித்தானியாவில் இது முதல் ஹோட்டலாக உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், குறித்த நபர் தண்ணீர் மெனு பற்றி பிரபலமாக இருக்கும் ஹோட்டல்களின் உரிமையாளர்களிடம் பேசியிருக்கிறார்.
Doran Binder கடைசியாக எடுத்த முயற்சி
ஆனால் அவர்கள் இந்த யோசனை நடக்காது என அவருடைய திட்டத்தை தட்டிக்கழித்துள்ளனர். அப்போது தன்னுடைய யோசனையில் இருந்து மாறாத Doran Binder அவர்களை தன்னுடைய இடத்திற்கு அழைத்து சுவைக்கும்படி தண்ணீர் வகைகளை கொடுத்திருக்கிறார்.
அதன் பின்னரே உரிமையாளர்கள் தண்ணீரில் கூட சுவையான வகைகள் உள்ள என்பதை தெரிந்து கொண்டுள்ளனர். பிரித்தானியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு, இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் விலைப்பட்டியல்
இந்த தண்ணீர் வகைகள், 5 பவுண்ட்(இந்திய மதிப்பில் ரூ.584) மதிப்பிலான Crag பிராண்ட் ஆரம்பமாகி, 19 பவுண்ட்(இந்திய மதிப்பில் ரூ.2,221) மதிப்பிலான The Palace of Vidago என்னும் மின்னும் போர்ச்சுகல் தண்ணீர் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தண்ணீரில் உள்ள தாதுக்களின் அளவே அதன் சுவை எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. அந்த அளவீடு TDS எனலாம்.
0 (TDS) அளவு கொண்ட நீரை மனிதர்களால் குடிக்க முடியாது. 14(TDS) உள்ள Lauretana sparkling நீர் முதல் முதல், 3,300 (TDS) வரையிலான பிரான்ஸின் Vichy Celastins உள்ளிட்ட பல வகையான குடிநீர்கள் வைக்கப்பட்டுள்ளன.
Doran Binder , நீரை அறை வெப்பநிலையில், ஐஸ் மற்றும் எலுமிச்சையுடன் சேர்த்து பரிமாறுகிறார். அத்துடன் தண்ணீர் ஒயின் போன்றது என்பதால் குளிராக இருந்தால் சுவை இருக்காது என்றும் மது பழக்கம் இல்லாதவர்களுக்கு இதுவொரு சிறந்த மெனுவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |