இந்தியாவில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் கிராமம்... அசத்தும் மக்கள்
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகமாகி வந்த நிலையில், தற்போது தொற்று சற்று குறைந்துள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இதனால் குறிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்களுக்கு பல விழிப்புணர்வினை வழங்கி வருகின்றது.
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயங்கி வந்த மக்கள், தற்போது ஊசி போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர். ஏனெனில் கொரோனாவிலிருந்து காப்பாற்ற மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி உள்ளது.
இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள வேயான் என்ற கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் கிராமம் என்ற பெருமையை வேயான் கிராமம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.