தென்னிந்திய பிரபலங்களுடன் மலையக தமிழர்களின் தைப்பொங்கல் விழா- நேரலை
மலையக வரலாற்றில் முதன்முறையாக மிகவும் பிரமாண்டமான முறையில் தேசிய தைப்பொங்கல் விழா மலையக மண்ணில் பிரம்மாண்டமாக இம்முறை கொண்டாடப்படுகிறது.
மக்களுக்காக அரசாங்க தரப்பால் நடத்தப்படும் இந்த நிகழ்விற்கு லங்காசிறி ஊடக அனுசரணை வழங்குகின்றமை சிறப்பம்சமாகும்.
இந்த நிகழ்வில் இலங்கை மலையகம் சார் அரசியல்வாதிகள் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதாவது தைப் பொங்கல் விழாவில் சிறப்பிக்கும் வகையில் தென்னிந்தியாவில் முக்கிய பிரபலங்களாக விளங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமியுக்தா,ஐஸ்வர்யா டட்டா, மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மலையக வரலாற்றில் இம்முறையே 1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, மிகவும் பிரமாண்டமான முறையில் தேசிய பொங்கல் விழா நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இன்று காலை ஆரம்பிக்கபட்ட நிகழ்வில் பாரம்பரிய நடனங்கள், மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இது தொடர்பான மேலதில தகவல்களை கீழுள்ள காணொளியில் நேரலையாக காணலாம்.