முதல் முறை தாம்பத்தியம் செய்யும் தம்பதிகள் இதை கண்டிப்பாக செய்யாதீங்க?
திருமண உறவில் தாம்பத்தியம் முக்கியமான ஒன்று. அதிலும், முதல் முறையாக தாம்பத்தியம் கொள்பவர்களுக்கு எல்லாமே புதிதாக இருக்கலாம்.
அதனால் பயம், பதட்டம் இருக்கலாம். எனவே முதல் முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சொதப்பாமல் இருக்க இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். உடலுறவு கொள்வதற்கு முன் அதில் இருவருக்கும் விருப்பம் இருக்க வேண்டும்.
மகிழ்ச்சி இருக்க வேண்டும். அது இருந்தால்தான் மற்ற விஷயங்களை சிறப்பாக செய்ய முடியும். முதலில் குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம் இல்லை என்றால் அதற்காக முன்பே திட்டமிட்டு கருத்தடை உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்துங்கள்.
அடுத்து உங்கள் துணையையும் நீங்களும் சௌகரியமாக இருங்கள். அதுதான் அடுத்த கட்ட நகர்வுக்கு நல்லது. இருவரும் பேசிக்கொள்ளுதல் நல்லது. உரையாடல் துணையின் எண்ணத்தை புரிந்துகொள்ள உதவலாம்.
உங்கள் துணைக்கும் விருப்பம் இருக்கும் என நீங்களாக நினைத்துக்கொண்டு திட்டம் போடாதீர்கள். அவரின் விருப்பதை கேட்டு தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது.
அதிகமாக கற்பனை செய்தல், இதையெல்லாம் செய்ய வேண்டும் என ஓவராக மனக்கணக்கு போட்டால் பதட்டத்தில் அனைத்தையும் விட்டுவிடுவீர்கள்.
அதிக எதிர்பார்ப்பும் தவறு. எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கவில்லை எனில் மகிழ்ச்சி இருக்காது. எனவே முதல் முறை தாம்பத்திய எதிர்பார்ப்புகள் முற்றிலும் தவறு.
மேலும், புதுபுது முயற்சிகளை எடுப்பது தவறு. இது துணைக்கு அதிக அழுத்தம் தருவதாக இருக்கும். எனவே எளிமையான முறையே சிறந்தது.