காப்பாற்றுங்கள்... பதவியேற்ற அடுத்த நிமிடமே முதல்வருக்கு வந்த முக்கிய கோரிக்கை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்திருந்த நிலையில், முதலின் ஐந்து ஜாக்பாட் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இன்று பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்திவிட்டு பின்பு கோட்டைக்கு சென்றுள்ளார்.
அங்கு முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார். முதல் பணியாக, 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். இது 2 தவணைகளாக வழங்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 2 ஆயிரம் ரூபாயை மே மாதத்திலேயே வழங்கும் உத்தரவில் இன்று கையெழுத்திட்டுள்ளார்.
ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் 16ம் தேதி முதல் குறைத்து விற்பனை செய்வதற்கான அரசாணையில் கையெழுத்திட்டார்.
சாதாரண கட்டண, நகர பேருந்துகளில் பெண்கள் நாளை முதல் இலவசமாக பயணம் மேற்கொள்வதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார்.
இதே போல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்குவதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார்.
இதேபோல் புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண புதிய துறை தொடர்பான கோப்பிலும் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு நடிகர் சிவகுமார் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, பல கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.
கலைஞருக்கு பின்பு ஸ்டாலின் ஆட்சியில் பொற்காலமாக திகழ சிவகுமார் வைத்திருக்கும் கோரிக்கை மக்கள் ஒவ்வொருவரின் கோரிக்கை என்றே கூறலாம்.
கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற கோரியும், தமிழ் மொழியினை கற்றுக்கொள்ளாமல் இருக்கும் மக்கள் குறித்தும், தங்களது ஆட்சியில் பொற்காலமாக அமைய வேண்டும் என்றும் கூறியுள்ள காணொளியினை இங்கே காணலாம்.