138 வருடங்களுக்கு பின் பிறந்த முதல் பெண் குழந்தை! கொண்டாடும் குடும்பத்தினர்
அமெரிக்காவில் 138 வருடங்களுக்கு பின்னர் பெண் குழந்தை பிறந்த சம்பவத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் ஆண்ட்ரூ க்ளார்க் மற்றும் கரோலின் தம்பதியினர்.
138 வருடங்கள் பின் பிறந்த குழந்தை
அமெரிக்காவில் ஆண்ட்ரூவின் பரம்பரையில் கடந்த 1885 ஆம் ஆண்டு கடைசி பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை அடுத்து வரும் காலங்களில் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு ஆண் குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளார்கள்.
மேலும் அந்த குடும்பத்திலுள்ளவர்கள் பல முயற்சிகள் செய்தும், எந்த விதமான பலனை தராமல் பெண் குழந்தைகளே இல்லாமல் இருந்துள்ளார்கள்.
இந்த நிலையில் குறித்த குடும்பத்தில், ஆண்ட்ரூ க்ளார்க் மற்றும் கரோலின் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தகவலை அந்த குடும்பத்தினர், ‘தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதால், நிலவில் உள்ளது போல் உணர்கிறோம்‘ என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.