முதன்முறையாக எஸ்குலேட்டர் ஏறிய பெண்கள்! இறுதியில் நடந்த கொமடியை பாருங்க
பொதுவாக, ஒரு நபரின் வாழ்க்கையில், முதலாவது அவர் செய்யும் விஷயம் என்பது எப்போதுமே நினைவில் உள்ளதாக தான் இருக்கும்.
முதல் காதல், முதல் விமான பயணம், முதல் வேலை என ஒருவரின் வாழ்வில் அவர் செய்யும் முதல் விஷயங்கள் ஏராளமானவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கொல்கத்தா பகுதியில் உள்ள மெட்ரோவில் சில பெண்கள் முதல் முறையாக எஸ்கலேட்டரில் ஏறும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

எஸ்கலேட்டரில் முதல் முறை ஏறும் போது, ஒரு வித பதற்றம் நிச்சயம் நெஞ்சுக்குள் இருக்கும். அப்படி சில பெண்கள் அடுத்தடுத்து மெட்ரோவில் உள்ள எஸ்கலேட்டரில் ஏறுகின்றனர். முதல் முறை என்பதால், சற்று பதற்றத்துடன் தான் ஏறி செல்கின்றனர்.
அப்படி முதலில் வரும் பெண், இறங்கும் நேரம் ஆனதும் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க, அருகே இருந்த ஆண் ஒருவர், அவரை பிடித்து பத்திரமாக வெளியே இழுக்கிறார்.
தன் பின்னர், வரும் இரண்டு பெண்கள், இறங்கும் போது, ஒரு காலை மேலே வைத்து துள்ளிய படி வெளியே குதிக்கின்றனர்.