மாரடைப்பு ஏற்பட்டு இதயம் நின்றுவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்
இன்று பலரும் இதய நோய் பிரச்சனையில் அவதிப்படும் நிலையில், இத்தகைய நோயாளிகளுக்கு இதயம் திடீரென செயல்படாமல் நின்றுவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
இதய பிரச்சனை
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றனர். உணவில் சரியாக கவனம் எடுத்துக் கொள்வது இல்லை.
காலநிலை மாற்றம், உணவு மாற்றம் இவை அனைத்தும் மனிதர்களின் உடல்நலப்பிரச்சனைக்கு காரணமாக அமைகின்றது.
அதிலும் இளைஞர்களை அதிகமாக தாக்கும் நோய் என்றால் மாரடைப்பு மிக முக்கியமாக இருக்கின்றது.
ஜிம் ஒன்றிலோ, அல்லது விளையாட்டு மைதானத்திலோ, வேலை செய்யும் அலுவலகத்திலோ இருக்கும் இளைஞர் திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சரிந்து நொடியில் உயிரிழப்பதை அடிக்கடி காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இவ்வாறான தருணத்தில் முதலுதவி எவ்வாறு அளிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிபிஆர் செய்வது எப்படி?
இதயம் செயல்படுவது திடீரென நின்றுவிட்டால் உடனே சிபிஆர் எனப்படும் உயிர் மீட்பு சுவாச சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
அதாவது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இதயம் நின்றுவிட்டால், அவருடைய ரத்த ஓட்டம் மற்றும் சுவாசத்தை மீட்டு எடுப்பதற்கு சில விடயங்களை உடனடியாக செய்ய வேண்டும்.
நோயாளியை காலம் தாமதிக்காமல் ஒரு சமமான இடத்தில் படுக்க வைத்து, நமது இரண்டு கைகளையும் மார்பின் மையத்தில் வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு 30 முறை வேகமாக செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு அழுத்தத்திற்கும் பின்பு மார்பு இயல்பான நிலைக்கு திரும்ப சில நொடிகள் இடைவெளி கொடுக்கவும் வேண்டும்.
அதாவது ஒரு நிமிடத்திற்கு 100லிருந்து 120 தடவை நீங்கள் அழுத்த வேண்டும். நீங்கள் அழுத்தம் கொடுக்கும் போது, 2 இன்ச் அளவிற்கு கீழும், மேலுமாக செல்ல வேண்டும்.
இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட நபர் உயிர்பிழைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மார்பின் மையத்தில் கை வைக்கும் போது, உங்களது தோள்பட்டை கைகளுக்கு நேராக இருக்குமாறு வைக்கவும். அவ்வாறு வைத்தால் மட்டுமே சரியான அழுத்தம் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |