மயக்கம் ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
நன்றாக இருக்கும் ஒரு நபர் திடீரென மயங்கி விழுந்துவிட்டால் உடனே என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
சில சாதாரணமாக நின்று பேசிக்கொண்டிருப்பார்கள்.. அத்தருணத்தில் அவர்களை அறியாமல் மயங்கி கீழே விழுந்துவிடுவார்கள். இதன் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மயக்கம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
மயக்கம் ஏற்பட்ட நபர்களுக்கு உடனடியாக தலைக்கு தலையணை வைக்கக்கூடாது.
உடனடியாக கீழே உட்கார வைப்பதோ அல்லது படுக்க வைப்பதையோ செய்ய வேண்டும்.
நல்ல காற்றோட்ட நிநைந்த இடத்திற்கு கொண்டு சென்று, இறுக்கமாக இருக்கும் ஆடைகளை கொஞ்சம் தளர்வாக இருக்குமாறு செய்யவும்.
தலை கீழேயும், பாதங்கள் மேல் நோக்கி இருக்குமாறு படுக்க வைக்க வேண்டும்.
பின்பு முகத்திற்கு தண்ணீர் தெளித்தால் நரம்புகள் தூண்டப்பட்டு மயக்கம் தெளிந்துவிடும்.
மயக்கம் தெளிந்த பின்பு குளுக்கோஸ் தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து கொடுக்கலாம். அப்படியும் மயக்கம் தெரியவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகவும்.