தீக்காயம் ஏற்பட்டால் உடனே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க...
வீட்டில் ஏற்படும் தீக்காயங்களுக்கு செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத முதலுதவிகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாம் சமையல் செய்துகொண்டிருக்கையில் கையில் திடீரென தீக்காயம் படுவது அவ்வப்போது நடைபெறும். அப்பொழுது நாம் அவசரத்திற்கு ஏதாவது ஒன்றினை வைத்து முதலுதவி செய்துவிடுகின்றோம்.
ஆனால் அவ்வாறு செய்வது சில தருணங்களில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடுகின்றது. ஆதலால் தீக்காயம் ஏற்பட்டால் எந்தமாதிரியான முதலுதவி எடுத்துக் கொள்ளலாம் என்பதையும் எந்த தவறுகள் செய்யக்கூடாது என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செய்யக்கூடாதவை
தீக்காயம் ஏற்பட்டால் உடனே அதன் மீது வெண்ணெய், மாவு, சமையல் சோடா போன்றவற்றினை தடவுவதைத் தவிர்க்கவும்.
மேலும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தீக்காயத்தின் மீது மருந்து போடுவதோ அல்லது எண்ணெய் பயன்படுத்துவதோ கூடாது.
தீக்காயம் ஏற்பட்டால் சில நிமிடங்களில் கொப்புளங்கள் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் கொப்புளங்களை நீங்களே உடைக்கவோ, கிள்ளவோ கூடவே கூடாதாம்.
தீக்காயத்தின் போது சிந்தெட்டிக் ஆடைகள் காயத்துடன் ஒட்டிக்கொண்டிருந்தால் அதனை உடனே அகற்றுவதற்கு முயற்சி செய்வது கூடாது.
இதே போன்று தீக்காயத்தின் மீது நேரடியாக பனிக்கட்டியை வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
முதலுதவி என்ன செய்யலாம்?
தீக்காயம் பட்ட இடத்திலுள்ள நகைகளை உடனடியாக அகற்றிவிட வேண்டும்.
தீக்காயம் ஏற்பட்ட பகுதியினை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சிறு காயமாக இருந்தாலும், சுத்தமான துணியால் மூடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
முகம், கண் போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்குச் சிறிய தீக்காயம் ஏற்பட்டாலும், சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
