நெருப்பில் சாகசம் செய்த இளைஞர்! தாடி தீப்பற்றி எரிந்த சோகம்
இன்றைய உலகில் பல மனிதர்கள் தங்களது சாகசங்களை அவ்வப்போது காணொளியாக வெளியிட்டு வரும் நிலையில், அக்காட்சிகள் வைரலாகவும் பரவி வருகின்றது.
இங்கு இளைஞர் ஒருவர் பார்வையாளர்களுக்கு மத்தியில் டேபிள் மீது நின்று கொண்டு, வாயில் பெட்ரோலை ஊற்றி நெருப்பை வைத்து சாகசம் காட்டினார். நெருப்பை கையில் வைத்துக் கொண்டு வாயில் பெட்ரோலை ஊற்றி கொப்பளித்ததும் எதிர்பாராத விதமாக தீ அவரது தாடியில் பற்றி எரிந்துள்ளது.
நெருப்பில் சாகசம் செய்து ஆபத்தில் சிக்கிக்கொண்ட நபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரவி பட்டீதர் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பதிவிட்ட இந்த வீடியோ 12 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இம்மாதிரியான சாகசத்தில் ஈடுபடுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஈடுபடுபவர்கள் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.