குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உளுந்து ராகி கஞ்சி! செய்வது எப்படி?
தற்கால குழந்தைகள் பெரும்பாலும் துரித உணவுகளையே அதிகம் உண்ண விரும்புகின்றனர். துரித உணவுகள் உண்பதற்கு சுவையாக இருந்தாலும் உடலுக்கு எந்தளவு பலத்தை கொடுக்கின்றது என்பது கேள்விக்குறியே.
தானியங்களை எடுத்துக் கொண்டால், உடலுக்கு உறுதியையும் வலுவையும் கொடுக்கக் கூடியது. அவற்றில் முதலிடத்தில் உள்ள தானியங்கள் உளுந்து மற்றும் ராகி என்பன.
உளுந்து மற்றும் ராகியில் செய்யும் கஞ்சியினால் பல நன்மைகள் காணப்படுகின்றன. அவையாவன, எலும்பு,தசை,நரம்புகளின் ஊட்டத்துக்கும் உடல் சூட்டை தணிக்கவும் உளுந்து மிகவும் நல்லது. ராகியில் கல்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
உளுந்து மற்றும் ராகி மா தயாரிக்க தேவையான பொருட்கள்
- உளுந்து - 1/2 கப்
- ராகி - 1/2 கப்
- ஏலக்காய்
உளுந்து,ராகி கஞ்சி தயாரிக்க தேவையான பொருட்கள்
- உளுந்து,ராகி மா - 1 மேசைக்கரண்டி
- ஏலக்காய் பொடி - சிறிதளவு
- தண்ணீர் - 1 கப்
செய்முறை
- முதலில் உளுந்து மற்றும் ராகியை எண்ணெய் ஊற்றாமல் நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்.
- வறுத்தவற்றை ஆறவிட்டதன் பின்னர், இரண்டையும் பவுடராக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மாவை கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
- அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கலவையை 10 நிமிடங்களுக்கு இடைவிடாமல் நன்கு கிளறவும்.
- பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- ஆரோக்கியமான உளுந்து, ராகி கஞ்சி தயார். கஞ்சியை மிதமான சூட்டில் பரிமாறவும்.