மறைந்த ஜாம்பவான் வார்னேவுக்கு இறுதி மரியாதை - எப்போது?
பிரபல ஆஸ்திரேலியா கிரிக்கெட் முன்னாள் ஜாம்பவனான ஷேன் வார்னே மாரடைப்பால் இறந்த சம்பவம் உலக கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதனைத்தொடர்ந்து, அவரது உடல் தனியார் விமானத்தில் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டது.
அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் இறுதிசடங்குகளை செய்தனர்.
இறுதி ஊர்வலம்
இந்நிலையில், ஆஸ்திரேலிய அரசு சார்பில் அவருக்கு இன்று மெல்போர்ன் மைதானத்தில் பிரமாண்டமான இறுதி மரியாதை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதே மைதானத்தில் தான் வார்னே தனது 700-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.
நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏற்கனவே இலவசமாக 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
தேவை அதிகமாக இருந்ததால் மேலும் 15 ஆயிரம் டிக்கெட் ஒதுக்கப்பட்டது.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி 2 மணி நேரம் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், வார்னேவுக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வீடியோ பதிவு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
Nasser Hussain pays tribute to Shane Warne with a beautiful rendition of Rudyard Kipling’s ‘If’.
— ICC (@ICC) March 30, 2022
Warne’s public memorial service is being held at the MCG in Australia on Wednesday at 1:30pm IST. pic.twitter.com/2hHZM7T7hm