சரத்பாபுவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது... கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்
மறைந்த நடிகர் சரத்பாபுவின் இறுதி ஊர்வலம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
நடிகர் சரத்பாபு
நடிகர் சரத்பாபு கடந்த 1971ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான பட்டின பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகமானார்.
ஆந்திராவில் பிறந்த இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகராக வலம் வந்த நிலையில், 230க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
அதிலும் ரஜினியுடன் முத்து, அண்ணாமலை படங்களில் நடித்தது தற்போது வரை ரசிகர்களால் பேசப்படுகின்றது. இந்நிலையில் தற்போது 71 வயதாகும் நடிகர் சரத்பாபு செப்சிஸ் எனும் செப்டிசீமியா நோய் பாதிப்பினால் மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது இறப்பு ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்த சென்னை கொண்டுவரப்பட்ட அவரது உடல் தற்போது இறுதி ஊர்வலத்திற்கு தயாரானது.